JUST IN
  • BREAKING-NEWS ‌வன்முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை அணிவகுப்பு மரியாதை

‘ஒரு கேப்டனுக்குக் கூட சொல்ல மாட்டீங்களா?’ - ஆர்சிபி செயலால் அதிர்ச்சி ஆன விராட் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முக்கியமான ஒரு அணி ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது. கடும் முயற்சி செய்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக இருக்கிறது இந்த அணி. இதனால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதும் கூட வாடிக்கையாக இருக்கிறது.

        image

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக, அந்த அணியின் பெயரிலிருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள கணக்குகளிலும் இந்த மாற்றம் வந்துள்ளது.

          image


ஏன் எல்லோரும் பும்ராவை விமர்சிக்கிறீர்கள்? : கொந்தளிக்கும் நெஹ்ரா 


பெயரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் அனைத்து கணக்குகளின் புரொஃபைல் பிக்சர், கவர் பிக்சர் ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன ? என்று அந்த அணியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அணி நிர்வாகம், பெயரை மாற்றுவதோடு அணியின் லோகோவையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இந்த செயல் அந்த அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் உள்ளிட்டோர் தங்களது அதிர்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தி இருந்தனர். என்னது? எல்லாவற்றையும் காணோமே என ஷாக் ஆகியிருக்கிறார் சாஹல்.

               image


‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. போலீசில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி 


இந்நிலையில், டிவில்லியர்ஸ், சாஹல் வரிசையில் தற்போது கேப்டன் விராட் கோலியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ‘போஸ்டர்களை காணவில்லை. கேப்டனிடம் கூட தகவல் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் தெரியப்படுத்துங்கள்’ என விராட் கோலி வெளிப்படையாகவே அதிர்ச்சியை காட்டியுள்ளார்.

இதனையடுத்து, கேப்டன் விராட் கோலிக்கு தங்களுடைய ஆதரவை இந்திய அணி ரசிகர்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: