JUST IN

Advertisement

வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய் - வீடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகப் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டார்.

image


Advertisement

அதற்குப்பின் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு முன் விஜய் ரசிகர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். நடிகர் விஜய்யைக் காண்பதற்காக அதிக ரசிகர்கள் கூடுவதால் பாதுகாப்புப் பணியில் போலீசாரும், அதிரடிப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

image

இந்நிலையில் இன்றும் விஜய் ரசிகர்கள் நெய்வேலி என்.எல்.சி.யில் கூடினர். அப்போது படப்பிடிப்பிலிருந்து வெளியே வந்த விஜய், வேனில் மீது ஏறி ரசிகர்களைப்பார்த்துக் கையசைத்தார். மேலும் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து செல்ஃபியும் எடுத்தார். விஜய் செல்ஃபி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement