"எனக்கும் வில்லியம்சனுக்கும் ஒரே சிந்தனை" கோலி நெகிழ்ச்சி...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் எனக்கும் கேன் வில்லியம்சனுக்கும் ஒரே சிந்தனை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
தெரிவித்துள்ளார்.


Advertisement

Image

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா அபாரமாக விளையாடி 5-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இதற்கடுத்து இந்த
இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முன்னதாக இன்றையப்
போட்டியில் கோலி விளையாடாமல் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதேபோல கடந்த இரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து கேப்டன் கேன்
வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்தப் போட்டியின்போது கோலியும், வில்லியம்சனும் பவுண்டரி கோட்டுக்கு பின்பு உட்கார்ந்து
நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவ்விருவரின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


Advertisement

Image

இன்றையப் போட்டி முடிந்த பின்பு பேசிய கோலி " கேன் வில்லியம்சனுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான மனநிலையும், சித்தாந்தங்களும் உண்டு.
இருவரும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும்போதிலும் எங்களுக்குள் ஒரே மாதிரியான சிந்தனை இருப்பதும், நாங்கள் உரையாடவதும்
எப்போதும் அற்புதமாக இருக்கும். நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சிறந்த கைகளில் இருப்பதாக உணர்கிறேன். இந்த அணியை வழிநடத்த இவர்தான்
சரியான வீரர். இந்த அணிக்கு எதிராக விளையாடுவதை உலகின் மற்ற அணிகளும் பெரிதும் விரும்புவார்கள்" என்றார்.

Image


Advertisement

மேலும் தொடர்ந்த பேசிய கோலி "இந்திய அணியின் இந்த வெற்றியை அணிக்கு உள்ளே இல்லாமல் வெளியே இருந்து பார்த்து மகிழ்ந்தேன். ரோகித்
சர்மா காயமடைந்தது வருத்தமளிக்கிறது. அவர் இல்லாத நேரத்தில் கே.எல்.ராகுல் தலைமையேற்று அணியை வழி நடத்தியது சிறப்பாக இருந்தது"
என்றார் அவர். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement