JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

ரேஸ் காட்சிகளுக்காக சுவிட்சர்லாந்து செல்கிறதா அஜித்தின் ‘வலிமை’ குழு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் சுவிட்சர்லாந்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இப்போது நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் வட இந்தியாவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் இப்படம் குறித்த சில விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட பின், வரும் ஏப்ரலில் சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடத்த சில ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.

image

இந்தப் படத்தில் அஜித்திற்கான இரண்டு ரேஸ் காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒன்று பைக் ரேஸ் காட்சியாகவும் மற்றொன்று கார் ரேஸ் காட்சியாகவும் படமாக்கப்பட உள்ளன. இந்தக் காட்சிகளை சரியாக இந்தியாவில் எடுக்க முடியாது என்பதால் சுவிட்சர்லாந்து செல்ல படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்த ரேஸ் காட்சிகளை எடுப்பதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். ஆகவே படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதற்கான அனுமதியை பெற ஒரு குழுவினரை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Image result for ajith valimai

அஜித்தின் ‘வலிமை’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை இயக்கியவர். அடுத்தடுத்து அஜித் ஒரே இயக்குநரின் படத்தில் நடித்து வருவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் யார் கதாநாயகி என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தப் படத்தில் நாயகி பாத்திரம் உள்ளதா? அப்படி என்றால் ஏன் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பன போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

‘வலிமை’ வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement: