JUST IN

Advertisement

பழனி: பிரபல வழக்கறிஞர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பழனியில் பிரபல வழக்கறிஞர் வீட்டில் 70 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனி மில்ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அருளானந்தம் முத்துக்குமாரசாமி. பிரபல வழக்கறிஞரான இவர், பழனி வழக்கறிஞர் சங்கத்தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இவர் தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர் பழனிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புறக்கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

image


Advertisement

வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் 70 சவரன் தங்க நகைகள், வைரம் பதித்த 3 புலி நகம் டாலர்கள் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையிலான போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனித கழிவை மாணவரை கொண்டு சுத்தம் செய்த வழக்கு - ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை

திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். மேலும், மோப்பநாய் லிண்டோ வரவழைக்கப்பட்டு திருடர்கள் குறித்த தேடுதல் வேட்டை நடத்தப்படுகின்றது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement