ஒன்றிய கவுன்சிலர் பதவி : கணவர் வெற்றி.. மனைவி தோல்வி

Councillor-post---husband-victory-wife-lost

திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்த நிலையில் அவரது கணவர் வெற்றி பெற்றுள்ளார்.


Advertisement

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் முதலாவது வார்டில் பாஜக சார்பில் பரமேஸ்வரி குமார் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கீதா ஸ்ரீதர் என்பவர் போட்டியிட்டார். இதில், கீதா ஸ்ரீதர் 1727 வாக்குகளும் பரமேஸ்வரி குமார் 1859 வாக்குகளும் பெற்றனர். இதனால் 132 வாக்குகள் வித்தியாசத்தில் கீதா ஸ்ரீதர் தோல்வியை சந்தித்தார்.

இதேபோல், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் நான்காவது வார்டில் கீதாவின் கணவர் ஸ்ரீதர், அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement