தமிழ்நாட்டில் வரும் 26-ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அதனைக் காண, உலகிலுள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் என பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும் போது அதன் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வு சூரிய கிரகணமாகும். சூரியன் முழுவதும் நிலவால் மறைக்கப்படுவது முழு சூரிய கிரகணம். மையப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டு, சூரியனின் விளிம்பு பிரகாசிப்பது வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்த அறிவியல் அதிசயம் வரும் 26-ஆம் தேதி தமிழ்நாட்டில் நிகழவுள்ளது. கிழக்கு வானில் உதயமாகும் சூரியனை மேற்கு பக்கத்தில் இருந்து நிலவு மறைக்கத் தொடங்கும். காலை 8 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வு பகல் 11 மணி 11 நிமிடங்கள் வரை ஏறக்குறைய 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கும். ஆனால், சூரியனின் மையப்பகுதியை நிலவு மறைப்பதால் வானில் தோன்றும் நெருப்பு வளையத்தை காலை 9.35 மணிக்கு சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே காணமுடியும். அதன்பின் நிலவு விலகத் தொடங்கிவிடும்.
சூரிய கிரகணம் 5 நிலைகளைக் கொண்டுள்ளது. சூரியனை நிலவு தீண்டும் நிலை ஸ்பரிசம் என அழைக்கப்படுகிறது. இதுவே முதல்நிலை. சூரியனுக்குள் முழுமையாக நிலவு சென்றுவிடுவது 2-ஆவது நிலை. அதிகபட்சமாக நிலவால் சூரியன் மறைக்கப்பட்டு அதன் விளிம்பு பிரகாசிப்பது 3-ஆவது நிலை. சூரியனிலிருந்து நிலவு விலக தொடங்குவது 4-ஆவது நிலை. கிரகணம் முழுமையாக விலகுவது 5-ஆவது நிலை. இது மோட்சம் என அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் சூரிய கிரகணத்தின் பிறை வடிவத்தை காணமுடியும். உதகை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி,
புதுக்கோட்டையில் மட்டுமே வளைய சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்க முடியும். சூரிய கிரகணத்தை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள்
விஞ்ஞானிகள்.
சூரிய ஒளியை மறைப்பதால் மரத்தின் நிழல் எப்படி பூமியில் விழுகிறதோ, அதோ போன்றே சூரியனின் ஒளியை மறைக்கும் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சூரிய கிரகணத்தின் போது திறந்த வெளியில் இருப்பதோ, உணவு உண்பதோ எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர். எவ்வித அச்சத்திற்கு ஆட்படாமல் பல ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் வானியல் அதிசயத்தை சூரிய கண்ணாடிகள், சூரிய ஒளி பிம்பங்கள் மூலம் எளிதில் கண்டு ரசிக்கலாம்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை