அயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு

Ayodhya-Verdict--Hindu-Mahasabha-Files-Review-Against-Direction-To-Allot-5-Acres-For-Mosque

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கும் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மனு செய்யப்போவதாக ஹிந்து மஹாசபை தெரிவித்துள்ளது. 


Advertisement

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்றம், அயோத்தியின் முக்கிய பகுதியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது. இதற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை என்பதால் அதை சீராய்வு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்போவதாக ஹிந்து மஹாசபை தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார். 


Advertisement

அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 நிலம் இந்துக்களுக்குச் சொந்தம் என கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஹிந்து அமைப்பு தரப்பிலிருந்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முதன்முறையாக கூறப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement