தமிழனின் வீரமும், விவேகமும் துருப்பிடித்து விட்டது: பொங்கும் பாரதிராஜா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் நடத்தட்டும். ஆனால், தமிழன் தான் ஆள வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும் அவரது அமைப்பை சேர்ந்தவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். திருமுருகன் காந்தி கொலை செய்தாரா? இல்லை கொள்ளையடித்தாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். எளிமையாக நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுப்பது நியாயமற்றது. மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்ததானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாரதிராஜா கூறினார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் நடத்தட்டும் ஆனால், தமிழன் தான் தலைமை தாங்க வேண்டும் என அவர் கூறினார். கலைஞர்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. தமிழனுக்கு இனப்பற்று போய்விட்டது. அவனது வீரமும், விவேகமும் துருப்பிடித்துவிட்டது என பாரதிராஜா கூறினார் .


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement