நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ

NEET-2020-Notification-released--registration-to-begin-from-4-pm-today-on-ntaneet-nic-in--

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


Advertisement

எய்ம்ஸ், ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள், ஏ.எஃப்.எம்.சி, இ.எஸ்.ஐ.சி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி என்பது அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றிதழ் பெற வேண்டும். 12 ஆம் வகுப்பு முடித்த இந்தியர்கள் அனைவரும் நீட் 2020 தேர்வு எழுத தகுதியுடையவர்கள். 


Advertisement

2020ஆம் ஆண்டு டிசம்பவர் 31 க்கு முன்னதாக அவர்களின் வயது 17 ல் இருந்து 25 க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல்/ பயோ டெக்னாலஜி ஆகிய பாடங்களை கணிதத்துடன் அல்லது ஆங்கிலத்துடன் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தை பயின்றிருக்க வேண்டும். 

இதையும் படிக்கலாமே: ஏர்டெல், வோடஃபோன் 42% கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமல்! 

ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது நீட் 2020க்கான பதிவு இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் தொடங்கும். இதுகுறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளமான  ntaneet.nic.in -ல் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி, முக்கியமான தேதிகள், வயது வரம்பு விதிகள் மற்றும் பிற மாற்றங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். 


Advertisement

நீட் நுழைவுத்தேர்வுக்கு www.nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையதளங்களில் டிசம்பர் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி 1 வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே 3ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 

பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500, ஒபிசி, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ. 1,400 விண்ணப்பக்கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்துடன் ஜி.எஸ்.டி சேவை கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது. 

முழு விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள் notification for NEET 2020.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement