[X] Close

குளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மயிலாடுதுறையில் குளத்தில் மூழ்கிய வாலிபரை அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற இளைஞர் ஒருவர் முயன்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சிவகுரு (26). இவர் அப்பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கொஞ்ச தூரம் போனதும் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் குளத்தில் குதித்து சிவகுருவை காப்பாற்ற முயற்சித்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் குளத்திற்கு வந்து பாதுகாப்பு மிதவையின் உதவியுடன் சிவகுருவை தேடினர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. 


Advertisement

இந்நிலையில் குளத்தில் சிவகுருவை தேடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ரயிலடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் விடா முயற்சியுடன் குளத்தின் அடிப்பகுதி வரை மூழ்கி சென்று மயங்கிய நிலையில் இருந்த சிவகுருவை மீட்டு தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார். உடனடியாக தயாராக இருந்த 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிவகுருவை அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் சிவகுரு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொருவரும் சுயநலம் இல்லாமல் ஆபத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக மணிகண்டனை போல் போராடினால் உயிர் சேதத்தை தடுக்க முடியும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். மணிகண்டனின் விடாமுயற்சி தோல்வியடைந்தது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement