விதியை மீறுவதா? ’பிகில்’ படத்தை கேரளாவில் வெளியிட்ட நடிகர் பிருத்விராஜூக்கு நோட்டீஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில், விதிகளை மீறி ’பிகில்’ படத்தை ரிலீஸ் செய்ததாகக் கூறி அதன் விநியோகஸ்தருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 


Advertisement

தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆனது. கேரளாவிலும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் அங்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார். நடிகர் விஜய்-க்கு அங்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளதால், இந்தப் படம் 200 ஸ்கிரீனில் வெளியிடப்பட்டது. 

பிற மொழிப் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யும் போது, 125 ஸ்கீரினுக்கு மேல் திரையிடக் கூடாது என்று கேரள தியேட்டர் அதிபர்கள் சங்கம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இதை மீறி, ’பிகில்’ படத்தை 200 ஸ்கிரீனுக்கு மேல் திரையிட்டுள்ளதால், தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடிகர் பிருத்விராஜ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Advertisement

அதில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதியை மீறியதால், ’பிகில்’ பட வசூலில் ஒரு பகுதியை சங்கத்துக்கு அபராதமாகக் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தவறினால் நடிகர் பிருத்விராஜின் படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement