சுஜித்தின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஸ்டாலின்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்பாக மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்


Advertisement

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் விழுந்தான். சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று தோல்வியில் முடிந்தது. சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட சுஜித்தின் உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Advertisement

நடுக்காட்டுப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார். பின்னர் சுஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்பாக ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement