தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மீது வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெண்களை இழிவு படுத்தியதாக தெலுங்கு நடிகர் சலபதி ராவ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பெண்கள் படுக்கையில் பயனுள்ளவர்கள் என்று சர்ச்சைக் கருத்தை கூறியிருந்தார் அவர். இதற்கு ஆந்திராவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நடிகர்கள் நாகர்ஜூனா, நாகசைதன்யா, நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து தனது கருத்து திரிக்கப்பட்டு விட்டது. யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்பதாக கூறியிருந்தார் சலபதி ராவ். இந்நிலையில், அவர் மீது சரூர் நகர் காவல் நிலையத்தில் பெண்களை இழிவு படுத்தியதாக மகளிர் அமைப்பு ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement