மனைவியை ப்ளேடால் கிழித்த கொடூர கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மனைவியை ப்ளேடால் கிழித்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Advertisement

சென்னை கொரட்டூரை சேர்ந்த தம்பதிகள் விஸ்வநாதன்- மீனா. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3  ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மீனா தங்கியிருந்த வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், தன்னுடன் வந்து சேர்ந்து வாழும்படி கூறி தகராறு செய்துள்ளார். அப்போது மீனாவுக்கும்-விஸ்வநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த ப்ளேடால் மீனாவை சரமாரியாக கிழித்துவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.


Advertisement

இதில் தலை, கை, முகம், கழுத்து என உடலில் பல இடங்களில் மீனாவுக்கு வெட்டு ஏற்பட்டது. காயம்பட்ட மீனாவுக்கு கே.எம்.சி மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை ப்ளேடால் கிழித்து தப்பிச் சென்ற கணவன் விஸ்வநாதனை கொரட்டூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

loading...
Related Tags : கொரட்டூர்KoratturHusband

Advertisement

Advertisement

Advertisement