விரைவாக 50 விக்கெட்டுகளை சாய்த்த இலங்கை ஸ்பின்னர் திடீர் ஓய்வு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கை சுழல் பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.


Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ். 34 வயதான இவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்றிரவு அறிவித்தார். 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மெண்டிஸ், பேட்ஸ்மேன்களை மிரள வைத்தவர். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பையின்  இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக, 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.
ஒரு நாள் போட்டிகளில், அதிவேக மாக (19 போட்டிகள்) 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். சமீபகாலமாக அணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் அவர், கடைசியாக 2015-ம் ஆண்டு  இலங்கை அணிக்காக ஆடினார். 

19 டெஸ்ட் போட்டிகளில் 70 விக்கெட்டுகளும், 87 ஒரு நாள் போட்டிகளில் 152 விக்கெட்டுகளும், டி-20 கிரிக்கெட்டில் 66 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement