Advertisement

"தப்பியோட வேண்டிய அவசியம் எனக்கில்லை" ப.சிதம்பரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய முனைப்பு காட்டி வருகிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனுவில், “ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் என்னுடைய பெயர் குறிப்பிடப்படாத நிலையில் எனக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்டது ஏன்? அத்துடன் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த போது எல்லாம் நான் விசாரனைக்கு ஆஜராகியுள்ளேன். சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஓளிய வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement