உண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் - காங்கிரஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது, அரசின் கோழைத்தனத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது


Advertisement

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் தற்போது உடனடியாக ப.சிதம்பரத்தின் மனுவை விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் ப.சிதம்பரத்தின் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுப்பி வைப்பார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் உண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது, அரசின் கோழைத்தனத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ப.சிதம்பரம் விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், மதிப்பிற்குரிய தலைவரான ப.சிதம்பரம் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். உண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது, அரசின் கோழைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement