வால்பாறையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் வீடுகள்: மக்கள் கடும் அவதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வால்பாறையில் பெய்த கனமழையால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


Advertisement

கோவை மாவட்டம் வால்பாறையில் 5 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வால்பாறை ஆறு, நடுமலை ஆறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ள நீர் வால்பாறை அருகே உள்ள ஷ்டேன்மோர் பகுதியில் இருக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்துள்ளது. 

இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் மூழ்கும் நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடைமைகளை இழந்து, இருக்க இடமின்றி தவிக்கும் நிலைக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ள நீர் புகுந்த குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர். அத்துடன் பொதுமக்களை வால்பாறை கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement