[X] Close

‌‌மூன்று மாதக் குழந்தையை தூக்கி வீசிக் கொன்ற தாய் - சிசிடிவி கேமராவில் சிக்கினார்

Subscribe
Lucknow-woman-throws-3-month-old-sick-son-from-4th-floor-of-hospital

லக்னோவில் பெண் ஒருவர் தமது மூன்று மாதக் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கொடூர சம்பவத்தை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

லக்னோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை ‌சரியில்லாமல் போனதில் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில்‌, அங்கேயே தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் திடீரென குழந்தையைக் காணவில்லை என தாய் கூறிய நிலையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குழந்தையை பெற்ற தாயே நான்காவது மாடியில் இருந்து வீசும் காட்சி பதிவானது. 


Advertisement

          

இதையடுத்து அந்த பெண் மீது அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை என கருதியதால் தனது மூன்று மாதக் குழந்தையை கொன்றதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close