Advertisement

50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பெருங்கடலில் வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது.


Advertisement

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் பால் என்பவரும் அவரது 9 வயது மகன் ஜியா எலியட்டும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அந்த பாட்டிலுக்குள் கடிதம் ஒன்றும் அடைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எடுத்து பார்த்ததும், அது 1969ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி , அப்போது 13 வயதான கில்மோரே என்பவர் அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது.


Advertisement

அந்த கடிதத்தில் ''இங்கிலாந்தில் இருந்து மெல்போர்ன் நகரத்திற்கு குடிபெயர்கிறேன், கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன் , யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ அவர்கள் பதில் அனுப்புங்கள்'' என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தக் கடிதத்தை எழுதிய கில்மோராவுக்கு எலியட் தற்போது பதில் அனுப்பியுள்ளார். கடிதம் எழுதியபோது 13 வயதான கில்மோரே, தற்போது 63 வயதில் மீண்டும் இங்கிலாந்துக்கே குடிபெயர்ந்தது வாழ்ந்து வருகிறார்.


Advertisement
loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement