அமேசான் கனடா நிறுவனம் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை விற்பனை செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பாரதிய ஜனதாவை சேர்ந்த தஜீந்தர் பால் இதனை டுவிட்டர் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
அமேசான் கனடா நிறுவனம் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைப்படத்தை விற்காமல் காஷ்மீரை நீக்கி ஆன்லைன் மூலம் விற்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த வரைபட விற்பனையை நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக அமேசான் கனடா நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே, இந்திய கொடி அச்சிடிப்பட்ட கால் மிதிகளை விற்பனை செய்து அமேசான் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியிருந்தது.
ஜம்மு காஷ்மீர் பகுதிகளை உரிமை கொண்டாடும் விவகாரத்தில், பாகிஸ்தானுடன் பிரச்சனை இருக்கும் நிலையில் அமேசானின் இந்த செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்