“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

Desperate-to-Thwart-BJP-in-Bengal--Mamata-Ready-to-Join-Hands-With-Once-Arch-Rivals-CPI-M---Congress

மேற்குவங்கத்தில்  பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

1998 ஆம் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த மம்தா பானர்ஜி அதில் இருந்து பிரிந்து, பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை அவர் எதிர்த்தாலும், மேற்குவங்கத்தில் அவரது பரம எதிரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்தது. 40 வருட மார்க்சிஸ்ட் கோட்டையை அவர் தகர்த்து ஆட்சியை பிடித்தார். இருகட்சிகளிடையேதான் நீண்ட காலம் வன்முறையும் இருந்து வந்தது.

           


Advertisement

ஆனால், இன்று மேற்குவங்கத்தில் அரசியல் நிலை முற்றிலும் மாறிவிட்டது. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய எதிரியாக பாஜக உருவெடுத்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு சரியான உதாரணம். அத்துடன், தேர்தல் முடிந்த உடன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள். திரிணாமுல், பாஜக இடையேயான வன்முறை சம்பவங்களில் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட மம்தாவினால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மம்தா செல்லும் இடமெல்லா ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு அவரையும் தொடர்ந்து கோபமூட்டுகிறார்கள் பாஜகவினர்.

    

இந்நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கியமான ஒரு அழைப்பை காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் உடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 


Advertisement

அதுவும் மேற்குவங்க சட்டசபையில் இதனைப் பேசியுள்ளார். “பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடும் என சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை ஒன்றுசேர்க்க வேண்டும்” என்று மம்தா கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement