“இன்று வெயில் மேலும் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்றும் நாளையும் அதிக அளவில் இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகப்பட்சமாக திருத்தணியில் 111‌ டிகிரி பாரன்ஹீட் அளவில் வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.


Advertisement

திருச்சி, நாகையில் 104 டிகிரி பாரன்ஹீட்‌ அளவுக்கும், கடலூர், புதுச்சேரியில் 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் வெப்பம் பதிவானது. தூத்துக்குடியில் 102 டிகிரி பாரன்ஹீட்டாக சுட்டெரித்த வெயில், கரூர்‌, சேலம், பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம்,‌ திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாள்களுக்கு இயல்பைவிட அதிக அளவில் வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement