“நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்?” - நீதிமன்றம் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது மகளின் திருமணத்திற்கு பரோல் கோரி நளினி தொடர்ந்த மனுவின் விசாரணைக்காக, அவரை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, லண்டலில் வசிக்கும் தனது மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய 6 மாதங்கள் பரோல் வழங்கக்கோரி மனு அளித்திருந்தார். அதில் ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதத்திற்கு பரோல் வழங்க, சிறை விதிகள் இருக்கும்போதிலும், தனக்கு 27 ஆண்டுகளாக பரோல் வழங்கப்ப‌டவில்லை எனக் கூறியிருந்தார்.


Advertisement

மேலும் தன் மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான ‌வழக்கறிஞர், திருமண ஏற்பாடுகள் தொடர்பான கூடுதல் ஆவணங்கள் ‌எதையும், நளினி தாக்கல் செய்யவில்லை என்றும், அவரை நேரில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், நேரில் ஆஜராக வேண்டும் என்ற நளினியின் கோரிக்கை மறுக்க முடியாது என்றும், அவரை நேரில் ஆஜர்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்த அரசு பதிலளிக்கவும்‌ உத்தரவிட்‌டனர். தேவைப்பட்டால்,‌ வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்ப‌டுகள் செய்யப்படும் எனக் கூறி‌ய நீதிபதிகள் வழக்கை ஜூன்‌18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த‌னர். ‌

loading...

Advertisement

Advertisement

Advertisement