செய்திகள் மூலம் கூகுளுக்கு ரூ.32,700 கோடி வருவாய்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2018ம் ஆண்டு செய்திகள் மூலம் கூகுள் நிறுவனம்  4.7 பில்லியன் டாலர்கள் (ரூ.32,700 கோடி) வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

இணையத்தில் எதை தேடுவதாக இருந்தாலும் நாம் முதலில் தேடி செல்வது கூகுளைத் தான். கூகுள் மூலமாகவே நாம் வேறு இணையதள பக்கத்தை அடைகிறோம். அப்படி கூகுளில் நாம் தேடும் ஒவ்வொரு தேடலும் அந்த நிறுவனத்துக்கு லாபத்தை தருகிறது. கூகுள் நிறுவனம் 2018-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்தமாக 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய வருடம் இதே காலக்கணக்கில் பெற்ற வருவாயை விட 22 சதவீதம் அதிகம்.


Advertisement

கூகுள் நிறுவனம் செய்திகள் மூலம் 4.7 பில்லியன் டாலர்கள் (ரூ.32,700 கோடி) வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இணையத்தில் உள்ள செய்தி நிறுவனங்களில் செய்திகளை நாம் தேடி தேடி படிப்பதன் மூலம் கூகுளுக்கு இவ்வளவு லாபம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த லாபத்தில் செய்தி நிறுவனங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் செய்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து அமெரிக்காவின் என் எம் ஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் ரூ.5.1 பில்லியன் டாலர்கள். அதில் கூகுள் பங்கு மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.


Advertisement

இது குறித்து கருத்து தெரிவித்த என் எம் ஏ தலைவர் டேவிட், செய்தி நிறுவனங்களால் கூகுள் அதிக லாபம் அடைகின்றன. ஆனால் அந்த லாபத்தில் செய்தி நிறுவனத்துக்கும், செய்திகளை எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் துளியும் பங்கு இல்லை. இந்த முரண்பாடு கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கூகுளில் பயனாளர்கள் செய்யும் தேடலில் 40 சதவிகிதம் செய்திகளை பற்றியது தான் எனவும் என்எம்ஏ குறிப்பிட்டுள்ளது
 

loading...

Advertisement

Advertisement

Advertisement