சென்னையில் பிரபல நீச்சல் வீரர் லாரி மோதி பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரியில் மோதி உயிர்ழந்த சம்பவம் சந்தேகங்களை எழுப்பி உள்ளது.


Advertisement

சென்னை ஷெனாய்நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன். தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். 

Image result for TN swimmer balakrishnan


Advertisement

இந்நிலையில் நேற்று இரவு தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கான்கிரீட் கலக்கும் லாரியில் மோதி பின்பக்க சக்கரத்தில் மாட்டிக் கொண்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பாலகிருஷ்ணன் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேர்வாகியிருந்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கக்கூடாது என அவரை அப்போது சிலர் தாக்கியதாகவும் அதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அப்போது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்று விபத்தில் பாலகிருஷ்ணன் மரணமடைந்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement