JUST IN

Advertisement

நீட் தேர்வெழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு கேரள மசூதியில் சிறப்பு வசதி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.


Advertisement

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.


Advertisement

இந்நிலையில் கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. பொதுவாக மாணவர்கள் தூரத்து இடத்தில் இருந்து வந்து தேர்வெழுதுவர். அவர்களுடன் வரும் பெற்றோர்கள், வெட்ட வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெற்றோர்கள் ஓய்வெடுப்பதற்காக கேரள மசூதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீமூலநகரத்தில் உள்ள மசூதியில்தான் பெற்றேர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இது பெற்றோர்களுக்கு மிகவும் உதவும் அமையில் அமைந்திருந்தது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement