4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

4-constituency-bye-election--Nominations-begins-today

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.


Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள‌ ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திரு‌ப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது.


Advertisement

இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 29-ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், ‌சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும், ஒட்டப்பிடாரத்தில் எம்சி சண்முகையாவும் போட்டியிடுகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement