சிஎஸ்கே அணியை வெல்லுமா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 


Advertisement

ஹைதராபாத்  ராஜிவ்காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி, 7 வெற்றி ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் உள்ளது. 

கடைசி 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள  ஹைதராபாத்  அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும். அதே வேளையில் மைதானத்துக்கு ஏற்ப வீரர்களை பயன்படுத்துவது, சரியான திட்டமிடல் என சென்னை அணியை கேப்டன் தோனி சரியாக வழிநடத்தி செல்கிறார்.


Advertisement

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பியுள்ள  ஹைதராபாத் அணி நடுவரிசை பேட்டிங்கில் கவனம் செலுத்தி, சென்னைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்ற நிலையில் உள்ளது. அதே வேளையில் பந்திவீச்சிலும் கவனம் செலுத்தி விளையாடினால் சென்னை அணியில் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.


Advertisement

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை அணி செல்வது உறுதியாகும் என்பதால் சென்னை அணியும் இந்த போட்டியை கவனமாக கையாளும் என்பதில் சந்தேகமில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement