சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்துள்ளது. தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், வார்னர், விஜய் சங்கர் ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இருப்பினும், விஜய் சங்கர் 27 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். முகமது நபி 12 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
இந்தப் போட்டியில், 7வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் அஸ்வின் பந்துவீசும் போது, அவரது கையில் இருந்து பந்து முற்றிலும் வெளியேறும் வரை, மிகவும் எச்சரிக்கையாக பேட்டை க்ரீஸில் வைத்திருந்தார் வார்னர். ஒருவகையில் அஸ்வினை வார்னர் கிண்டல் செய்யும் வகையில் இது உள்ளது. இதனை காட்டும் புகைப்படம் உடனடியாக ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டது. அந்த படத்தை பார்க்கும் போது சற்றே நகைச்சுவையாக இருக்கும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது போல், இந்தப் போட்டியிலும் எதிர்பார்க்கலாம் என்று ஒரு கமெண்ட் செய்திருந்தார்.
முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பட்லரை 'மன்கட்' முறையில் அஸ்வின் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த மன்கட் அவுட் சமூக வலைதளங்களில் அப்போது பெரிய விவாதத்தையே இது கிளப்பியது.
விதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும், விதியே சரி எனும் போது அதில் தவறேதும் இல்லை என்றும் இரு தரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்பட்டது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்