மனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு போன் செய்த தந்தை! 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊத்தங்கரையில் மனைவியின் நடத்தை சரியில்லாததால் மனைவியைக் வெட்டிப் படுகொலை செய்த கணவன் காவல்துறையிடம் சரண் அடைந்தார்.


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர் ரவி - காமாட்சி தம்பதியினர். இவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். இந்த சூழலில் ரவியின் மனைவி காமாட்சிக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மனைவி காமாட்சிக்கு முருகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பது கணவன் ரவிக்கு தெரிந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக காமாட்சி அம்மா வீட்டில் ரவி பஞ்சாயத்தும் செய்துள்ளனர். 


Advertisement

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு ரவி தன்னுடைய மனைவி காமாட்சியை அரிவாளால் வெட்டி கொன்றதாக ரவி தன்னுடைய மகள் அய்யம்மாள் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் ஓடி வந்து பார்த்த மகள், தாய் இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அய்யம்மாள் இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசில் தகவல் கூறியுள்ளார்.

இதற்கிடையே ரவி தனது மனைவி காமாட்சியை வெட்டி கொன்றதாக சிங்காரப்பேட்டை போலீசில் சரண் அடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நடத்தை சரியில்லாததால் மனைவியைக் மனைவி வெட்டிப் படுகொலை செய்தேன் என விசாரணையில் கணவர் ரவி ஒப்புதல் அளித்ததால் காவல்துறை அவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement