[X] Close >

பிரதமர் மோடி படத்துக்கு பாடல் எழுதவில்லை: ஜாவேத் அக்தர் மறுப்பு

Javed-Akhtar-denies-having-written-any-song-for-PM-Modi-biopic

பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையை கொண்ட படத்தில் தான் பாடல் எழுதவில்லை என்றும் ஆனால் போஸ்டரில் தனது பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. மேரி கோம், சர்ப்ஜித் ஆகிய வாழ்க்கைக் கதைகளை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடிக்கிறார். மனோஜ் ஜோஷி, அமித் ஷாவாகவும் ஷரினா வகாப் மோடியின் அம்மாவாகவும் பர்கா பிஸ்ட் செப்குப்தா மோடியின் மனைவியாகவும் நடிக்கின்றனர்.


Advertisement

மோடியின் கடந்த கால வாழ்க்கையில் தொடங்கி அவர் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 தேர்தலில் இந்திய பிரதமராகும் வரையுள்ள நிகழ்வுகளை கொண்டுள்ளது, இந்தப் படம்.  ஜனவரி 7ஆம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் படத்தைத் தொடங்கி வைத் தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் முடிந்து, ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் தான் பாடல் எழுதவில்லை என்றும் ஆனால் தனது பெயர் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றிருப்பதாகவும் பிரபல உருது கவிஞரும் இந்தித் திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். 


Advertisement

‘பிஎம் மோடி வாழ்க்கை கதையை கொண்ட படத்தில் நான் பாடல் எதையும் எழுதவில்லை. ஆனால், படத்தின் போஸ்டரில் என் பெயர் இடம்பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்’’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை அவர் மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஷ்மி, ஷேர் செய்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close