[X] Close >

ராணுவத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தமிழரா..? வேகமாக பரவும் போலி செய்தி..!

Fake-News-in-Viral

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு மூளையாக செயல்பட்டவர் முதுகுளத்தூரை சேர்ந்த தமிழன் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேமசயம் தாக்குதல் நடத்திய எந்தவொரு வீரர்கள் விவரமும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


Advertisement

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் முகாமை அழித்த இந்திய விமானப் படை வீரருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே இந்திய விமானப் படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் முதுகுளத்தூரை சேர்ந்த தமிழன் என்ற செய்தியுடன் ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

(வேகமாக பரவும் போலி புகைப்படம்)

தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் விவரங்கள் இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், முதுகுளத்தூரை சேர்ந்த தமிழன்தான் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்பது போலி செய்தி என்று தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த புகைப்படமும் போலி என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக பெண் ஒருவரின் புகைப்படத்தை வைத்து அவரும் விமானப் படை குழுவில் அங்கம் வகித்ததாக செய்திகள் பரவின. அதனையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்துவிட்டு அதில் ஆண் ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இவர் தான் இந்திய ராணுவத்திற்கு மூளையாக செயல்பட்டார் என்ற செய்தி பரவி வருகிறது. அதுவும் அவர் தமிழர் என்பதால் அதிகம் ஷேர் செய்யவும் என்றும் செய்தி பரவுகிறது. ஆனால் அந்த புகைப்படம் உண்மையில்லை என்பதும் போலி செய்திதான் சமூக வலைதளங்களில் பரவுவதும் தெரியவந்துள்ளது. இதனிடையே இணையத்தில் பரவும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியாமல் அதனை அப்படியே ஷேர் செய்யக்கூடாது என அச்செய்தியின் உண்மை அறிந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close