ஒரே மேடையில் ஸ்டாலின் - கமல் ! முரசொலி விமர்சனத்துக்கு பின் நிகழ்ந்த சந்திப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவள்ளூர் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பங்கேற்றனர்.


Advertisement

திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்த கட்டுரை வெளிவந்த நிலையில் இன்று இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல் சுமைகளை சுமக்க தான் தயாராக இல்லை என்று தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த திமுக,  அக்கட்சியின் நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தது.


Advertisement

(கோப்புப்படம்)

அதில் ''பத்மஸ்ரீ பட்டம் பெற்றபோதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை அழைத்த போதும், கமல்ஹாசனுக்கு திமுக ஊழல் கட்சியாகத் தோன்றவில்லை என்றும், ஆனால் இப்போது திடீரென திமுக ஊழல்கட்சியாக கமலுக்கு காட்சியளிக்கிறது என்றால், அது அவரது சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா எனவும் முரசொலியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தின் காரணமாக, கமல்ஹாசன் தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார் எனவும், காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளார்'' என்றும் முரசொலி நாளிதழில் விமர்சனம் வெளியானது.


Advertisement

இந்நிலையில் திருவள்ளூர் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அங்கு அமைக்கப்பட்ட மேடையில் ஸ்டாலினும், கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வர வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்தார். பிறகு அறிக்கை விடுத்த அவர், ''திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அது தன் கவனத்துக்கு வரவில்லை. அதற்கிடையில் தான் நான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன்'' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் இன்று கமலை விமர்சனம் செய்து கட்டுரையும் வெளியானது.

அரசியல் தலைவர்கள் திருமண விழாக்களில் கலந்து கொள்வது அரசியலைத் தாண்டிய விஷயம் என்றும், இதனை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் ரீதியாக பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் நேரில் சந்திக்கும் பொழுது தலைவர்கள் சகஜமாக உரையாடுவது அரசியல் நாகரிகம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement