‘பேட்ட’ திரைப்படத்தை வெளியிடுவதில் தெலுங்கு சினிமா உலகம் அவமானப்படும் வகையில் நடந்து கொள்வதாக சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்பட்டம் நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ‘பேட்ட’ திரைப்படம் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் வெளியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், ‘பேட்ட’ படத்துக்கு அவ்வளவாக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு அடிப்பட்டது.
இந்நிலையில்,‘பேட்ட’ படம் குறித்து சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் தளத்தில் சில காட்டமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், “தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் சில திரையரங்களில் மட்டுமே ரஜினி காந்தின் ‘பேட்ட’ படம் வெளியாகிறது? டோலிவுட் பட மாஃபியாக்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.
சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் தில் ராஜு ஆகியோரை நினைத்தால் அவமானமாக உள்ளது. அவர்கள் சிறிய பட தயாரிப்பாளர்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள். அவர்கள் விரைவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வார்கள். உங்கள் மன்களும், உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இருப்பார்கள். எந்தத் தெலுங்கு டப்பிங் படமாவது தமிழகத்தில் தடை செய்யப்படுகிறதா?. இந்த மாஃபியா தலைவர்களை கொல்லுங்கள். இவர்களால் தெலுங்கு சினிமா அவமானப்படுகிறது. ‘பேட்ட’ பட விநியோகஸ்தார் அசோக் குருவின் இந்த நிலைமைக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Loading More post
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!