கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப் படுகிறது.


Advertisement

பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானவிஜய் தர்தா இதுபற்றி கூறும்போது, ‘ லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாநிலங்கள வையில், 2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக  கனிமொழி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வரும் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி,  அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குவார். நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக  மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும், கனிமொழிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு தேர்ந்தெடுத்துள்ளது. டாக்டர் முரளி மனோஜர் ஜோஷியை தலைவராகக் கொண்ட விருதுகள் தெரிவுக்குழுவில், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, பேராசிரியர் சௌகதா ராய், பிரஃபுல்பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற வாதிகள் இடம்பெற்றுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement