[X] Close >

நள்ளிரவில் ராமேஸ்வரத்தில் நல்ல மழை.. 22 செ.மீ மழை பதிவு

Heavy-Rain-in-Rameshwaram

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.


Advertisement

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் நள்ளிரவு பெய்த மழையில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 22 சென்‌டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பாம்பனில் 15.2 சென்டி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


Advertisement

அடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் 21 சென்டி மீட்டரும், திண்டுக்கலில் 14 சென்டி மீட்டரும், சத்திரப்பட்டியில் 10 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

‌திருவாரூர் ‌மாவட்டம் வலங்கைமானில் 19 சென்டி மீட்டரும், திருவாரூரில் 17.3 சென்டி மீட்டரும், நீடாமங்கலத்தில் 15.2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், கடலூர் மாவட்டம், கீழசெருவாய் மற்றும் லக்கூரில் தலா 14 சென்டி மீட்டரும் மேமாத்தூரில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5.3 சென்டி மீட்டரும், சங்கராபுரத்தில் 4.2 சென்டி மீட்டரும், கள்ளக்குறிச்சியில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close