ஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

உடல்நலக்குறைவு காரணமாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதன்படி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.


Advertisement

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர்  “ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என டிடிவி தினகரன் நினைக்கிறார். இந்த ஆட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார்.சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக்கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் என கூறியுள்ளார்.


Advertisement

இத்னைதொடர்ந்து பேசிய சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் "கட்சிக்காக உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லாமல் இருந்து விட்டார். வெளிநாடு சென்றிருந்தால் தற்போது ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார்” என கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முயற்சி செய்தோம்,யார் தடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஆறுமுகசாமி விசாரணையில் தெரியவரும் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement