மாப்பிள்ளை ரோகித் சர்மாதான் ஆனா சட்டை தோனியோடது !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இப்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், ஹாங் காங், இலங்கை நாடுகள் மோதி வருகின்றன. இதில் இலங்கை, ஹாங் காங் அணிகள் தொடர் தோல்வி காரணமாக போட்டியில் இருந்து வெளியேற இருக்கின்றது. இந்தத் தொடரின் மிக முக்கியமான போட்டி இன்று பாகிஸ்தான் - இந்தியா இடையே நடைபெறவுள்ளது.


Advertisement

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஹாங்காங் அணியை நேற்று எதிர்கொண்டது இந்தியா. இந்தப் போட்டியில் ஹாங்காங் மிகப்பிரமாதமாக விளையாடியது. இந்தியா நிர்ணயித்த 286 ரன் இலக்கை மிக லாவகமாக சேஸ் செய்தது ஹாங்காங் அணி, ஆனால் இறுதியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. ஆசியக் கோப்பை போட்டியில் விளையாட விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்திய அணி ஆசியக் கோப்பைக்கு ரோகித் சர்மா தலைமையில் செல்லும்போதே, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தோனிதான் அணியை வழி நடத்துவார் ரோகித் பெயருக்கு கேப்டனாக செயல்படுவார் என சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.


Advertisement

இந்தியாவின் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோலி இல்லாமல் ஆசியக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணியை தோனி வழி நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். எல்லோரும் நினைத்தது போலவே தோனி தான் நேற்றைய ஹாங்காங் இடையிலான போட்டியில் இந்தியாவை வழி நடத்தினார். இந்தியா பேட்டிங் செய்த போது தோனி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். இதனையடுத்து தோனி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதையெல்லாம் மறந்து ஹாங்காங் பேட்டிங்கின் போது அமைதியாக தனது விக்கெட் கீப்பிங் பணியை செய்துக்கொண்டு இருந்தார் தோனி.


Advertisement

10 ஓவரானது ஹாங்காங் விக்கெட் விழவில்லை, 20 ஓவராகியும் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கூட ஆட்டமிழக்கவில்லை. கேப்டன் ரோகித் சர்மா பவுலர்களை மாற்றியும் பலன் இல்லை. இதற்கிடையே குல்தீப் யாதவ் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிஸாகத்தை எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழக்க அம்பயரிடம் அப்பீல் கேட்டார், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதனை ரிவ்யூ செய்ய தோனியிடம் ஐடியா கேட்டார் குல்தீப், அதற்கு தோனி ரிவ்யூ வேண்டாம் என சொல்லிவிட்டார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ செய்தார், மூன்றாம் நடுவரும் அவுட் கொடுக்காததால் ரிவ்யூ வீணானது. சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் ஹாங்காங் தொடக்க ஆட்டக்காரர்கள் திணறிக்கொண்டு இருந்தனர். ரோகித் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர்களை அழைத்து பந்து வீச சொன்னார், ரன்கள் பறந்தது.

இதனையடுத்து தோனி, ரோகித்திடம் சென்று மீண்டும் 35 ஆவது ஓவரில் குல்தீப்பை பவுலிங் போட அழைக்குமாறு கேட்டார். தோனியின் திட்டம் வேலை செய்தது, ஹாங்காங் தொடக்க வீரர் அன்ஷுமன் அவுட்டானார். இதனையடுத்து தோனி தானே முன் வந்து பவுலர்களை வரிசையாக மாற்றினார். இந்திய அணியில் அறிமுக வீரராக பந்து வீசிய கரீம் அகமது தோனியின் ஆலோசனைப் படி பந்து வீசினார். இதன் பின்பு விக்கெட்டுகள் வரிசையாக விழத்தொடங்கியது. இதனையடுத்து இந்திய பவுலர்கள் அனைவரும் தோனியின் ஆலோசனைப்படியே பந்து வீசினர், அதற்கு ஏற்றார்போல பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். ரோகித் சர்மாவும் எப்படியும் ஜெயித்தால் போதும் என்று பொறுப்பை தோனியிடமே விட்டுவிட்டார்.

விக்கெட்டுகள் விழ ஆரம்பித்த பிறகு ரோகித்தும் நிம்மதியாக பீல்டிங்களில் தவானுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். தோனி மட்டுமே படு சீரியஸசாக பவுலர்களுடன் கலந்தோலிசித்தார். படையப்பா படத்தில் வரும் வசனம் இதுதான் "மாப்பள அவர்தான் ஆனா போட்டு இருக்கிற சட்டை என்னோடது". அதேபோபோலதான் இந்திய அணியின் தற்போதைய நிலையும் "கேப்டன் ரோகித் சர்மாதான் ஆனா பீல்டிங் செட் பண்ணுறது தோனிதான்".  

loading...

Advertisement

Advertisement

Advertisement