இளம் பெண்ணை கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன் - பரபர வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் இளம் பெண்ணை போலீஸ் அதிகாரி மகன் ஒருவர் சரமாரியாக அடித்து கொடுமை படுத்தும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாருக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளரின் மகன் ரோகித் சிங் தோமர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 


Advertisement

இந்த வீடியோவில், பெண்ணின் முடியை பிடித்து இழுத்து பளார், பளார் என அவரது கன்னத்தில் போலீஸ் அதிகாரின் மகன் அடிக்கிறார். மேலும், அந்தப் பெண்ணை தரையில் இழுத்து போட்டு அடிக்கிறார். தன்னுடைய கால் மூட்டால் தொடர்ந்து தாக்குகிறார். இந்தக் காட்சிகளை அவரது நண்பர் படம் எடுத்துள்ளார். அப்போது ‘ரோகித், நிறுத்து போதும்’ என்று கூறுகிறார். ஆனால், அந்த நண்பர் அடிப்பதை தடுத்து நிறுத்தவில்லை. 

         


Advertisement

இந்த வீடியோ டெல்லி உத்தம் நகரில் உள்ள கால் செண்டர் ஒன்றில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அவரது நண்பர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாக பலராலும் பகிரப்பட்டுள்ளது. வைரலாக பகிரப்பட்ட இந்த வீடியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வைக்கும் சென்றுள்ளது. 

இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோவை பார்த்தேன். இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னரிடம் பேசியுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

         


Advertisement

இதில் முக்கிய திருப்பமாக மற்றொரு பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ரோகித் மீது நேற்று புகார் அளித்துள்ளார். அதில், தான் ரோகித்திற்கு நிச்சயக்கப்பட்ட பெண் என்றும், அவர் தன்னுடைய அலுவலக பெண் ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவை பார்த்த பின்னர் திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார். 

    

இதனையடுத்து, வீடியோவில் உள்ள அந்தப் பெண் இன்று போலீசில் புகார் அளித்துள்ளார். ரோகித் தன்னுடைய நண்பர் அலுவலகத்திற்கு தன்னை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். போலீசில் கூறிவிடுவேன் என்று சொன்னால் கடுமையாக தாக்கியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரோகித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement