கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம்! - விமானத்துறை எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Advertisement

கேரள மாநிலம் கனமழையால் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. 100 வருடங்கள் இல்லாத வகையில் அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவுக்கு செல்லும் விமானங்கள் கட்டணம் அதிகம் வசூலிக்கக்கூடாது என உள்நாட்டு விமான போக்குவரத்துறை எச்சரித்துள்ளது.

கேரளா செல்லும் விமானங்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணம் குறித்து, உள்நாட்டு விமானத்துறை இயக்குநர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சில விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வ‌சூலிப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி சில விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளதும் தெரியவந்துள்ளது. கட்டண உயர்வு குறித்து பயணிகள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement