ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள காலா படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பிறகு வரும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதானமான இடங்களில் அமைந்திருக்கும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்று அதிகாலை சிறப்புக்காட்சிகளை காண வந்த ரசிகர்கள் திரையரங்கத்தின் முன் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காலா படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அமீர்கான் தனது ட்விட்டரில், “நான் எப்பொழுதும் ரஜினியின் தீவிர ரசிகன். காலா படத்தை பார்க்காமல் இனியும் காத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காலா படத்தின் டிரெய்லரையும் பதிவிட்டுள்ளார்.
Loading More post
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி