[X] Close >

போராட்டத்திற்கு காரணம் அயல்நாட்டு கம்பெனிகள் சதியாம்! ஸ்டெர்லைட் விளக்கம்..

Sterlite-Copper-Associate-Vice-President-Sumathi-Angusamy-Explaine-about-Protest

தூக்குத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள் குறித்து அந்நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.


Advertisement

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் 43 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரம் தேசிய அளவிலான பிரச்னையாக மாறியுள்ளது. 


Advertisement

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அசோசியேட் துணைத் தலைவர் சுமதி விளக்கமளித்துள்ளார். அதில், “ஸ்டெர்லைட் நிறுவனம் மிகவும் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலிருந்து எடுக்கப்படும் காப்பரை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என நினைத்து செயல்படுகிறோம்.

இதன்மூலம் சாலைகள் அமைப்பது, கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வழங்குகிறோம். இவையெல்லாம் அவற்றிற்கு பயன்படுத்தலாம் என்று சோதித்த பின்னரே வழங்குகிறோம். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு கேன்சர் வருவதாக வதந்தி நிலவுகிறது. அதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆதாரமின்றி மக்கள் இதை நம்பக்கூடாது. இந்திய அளவில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ள இடங்களின் பட்டியலில் தூத்துக்குடி இடம் பெறவில்லை. இந்தத் தகவல்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 


Advertisement

எங்கள் கம்பெனியின் எதிரே நூறு குடும்பங்கள் உள்ளன. நானும் அங்கு தான் உள்ளேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. எனக்கோ, என் குழந்தைகளுக்கு, எங்கள் கம்பெனியில் பணிபுரிபவர்களுக்கோ எந்த உடல் ரீதியான பிரச்னையும் வரவில்லை. இங்கு மட்டுமின்றி எங்கள் கம்பெனி இயங்கும் எங்குமே பிரச்னைகள் வந்ததில்லை. இதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்துள்ளோம். மன்னார்வளைகுடாவிற்கு 25 கிலோ மீட்டருக்குள் எங்கள் ஆலை அமைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெற்றுள்ளோம். 

அதுதொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். அதன்படி படியே ஆலை அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் தொலைவிற்கு மரம் வளர்க்க வேண்டும் என்ற முறையை குறைத்துக்கொள்ளுமாறு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்தோம். அவர்கள் 250 மீட்டர்கள் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை 25 மீட்டராக மாற்றி அனுமதித்தனர். அதன்படியே மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவே காப்பர் உற்பத்தி செய்கிறோம். ஒருநாளை 391 டன்கள் உற்பத்தி செய்கிறோம். வருடத்திற்கு 1,42,715 டன் உற்பத்தி செய்யலாம். நாங்கள் வருடத்திற்கு 1,40,000 டன்கள் தான் உற்பத்தி செய்துள்ளோம். அதன்படி நாங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவு தான் உற்பத்தி செய்துள்ளோம். 

நாங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திட்டம் பெற வேண்டிய சில அனுமதிகளை மாற்றி அமைத்ததால் தான் உச்சநீதிமன்றம் எங்களுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. 2013ஆம் ஆண்டு எங்கள் நிறுவனத்தின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வாயுக்கசிவால் சிலர் இறந்தது எங்கள் கம்பெனியால் இல்லை என்பதை நாங்கள் மாசுக்கட்டுப்பாடு நிபுணர்கள் மூலம் நிரூபித்தோம். அத்துடன் மிகவும் பாதுகாப்பாகத் தான் எங்கள் நிறுவனம் இயங்குகிறது. அதற்காக உலக தரம் வாய்ந்த அமைப்புகள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. நாங்கள் அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக கூறுகிறோம். 

மக்களுக்கு குழப்பங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக சனிக்கிழமை தோறும், கம்பெனிக்குள் மக்கள் பார்வையிட அனுமதிக்கின்றோம். அவர்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் விளக்கமளிக்கின்றோம். இந்தியாவில் மூன்று காப்பர் கம்பெனிகள் இயங்குகின்றன. ஆனாலும் இந்தியாவின் காப்பர் தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை. எனவே தான் இந்தியா வெளிநாடுகளிலிருந்து காப்பர் இறக்குமதி செய்கின்றது. அந்த காப்பர் தேவையை பூர்த்தி செய்யவே நாங்கள் முயற்சிக்கிறோம். இருப்பினும் இதற்கு எதிராக வெளிநாட்டு அரசுசார நிறுவனங்கள் நிதி ஒதுக்கி போராட்டங்களை நடத்த செய்கின்றன. தூத்துக்குடியிலும் அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடக்கச்செய்கின்றனர்.” என்று கூறினார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close