பிரியா வாரியரின் கண் அசைவில் பாதுகாப்பு விழிப்புணர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

நடிகை பிரியா வாரியரின் கண் அசைவு வைரல் படம் மூலம் குஜராத்தின் வடோதரா காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

கண் அசைவில் விபத்துகள் நேரிடலாம், கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் குஜராத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அம்மாநில காவல்துறையின் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் நடிகை பிரியா வாரியரின் வைரல் படத்துடன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளததாகக் கூறப்படுகிறது. 
வெறுமனே கருத்துகளை, அறிவுரைகளை கூறும்போது அவை மக்களை சென்றடைவதில்லை எனவும், அதே நேரம், பாலிவுட் திரைப்படங்களின் பிரபல‌‌ வாசகங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் போது நல்ல பலன் கிடைப்பதாக வடோதரா நகர காவல்துறை ஆணையர் மனோஜ் சசிதர் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement