5ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் கொடுமை? போலீஸ் காலில் விழுந்த குடும்பத்தினர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

5ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமையாசிரியரை கைது செய்யக்கோரி போலீசாரின் காலில் விழுந்து குடும்பத்தினர் கதறிய காட்சி அனைவரையும் பதற வைத்துள்ளது.


Advertisement

சென்னை பெருங்குடி டெலிபோன் நகர் 17வது தெருவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பதினோரு வயது சிறுமி ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த இரண்டு மாதமாக பள்ளிக்கு செல்ல சிறுமி மறுத்து வந்த நிலையில், பெற்றோர் விசாரித்த போது, தலைமையாசிரியர் ஜெயபாலன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அப்பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரை வெளியே வருமாறு கூச்சலிட்டனர். அங்கு விரைந்த போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர்களும், உறவினர்களும் காலில் விழுந்து பள்ளியின் தலைமையாசிரியரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை உதவி ஆணையர் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்து, சம்பவ இடத்திலேயே புகாரை பெற்றுகொண்டார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement