பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி இன்னும் ஓராண்டு தான் உள்ளது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை வாசித்தார். சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சனம் செய்ததோடு, கிண்டலும் செய்துள்ளார். நன்றி, பாஜக ஆட்சி நிறைவடைய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பட்ஜெட் மீதான தனது விமர்சனத்தில், “பா.ஜ.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை; பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள் மட்டுமே உள்ளது. 4 ஆண்டுகளை கடந்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்