கமல்ஹாசன் மீது கமிஷனர் அலுவலத்தில் புகார்!

RK-Nagar-Results--Case-failed-in-Commissioner-office-against-KamalHassan

ஆர்.கே நகர் வாக்காளர்களை விமர்சித்த கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்தார்.

இதையடுத்து ஆர்.கே நகர் மக்களை இழிவுபடுத்தியதாக வழக்கறிஞர் திருக்கண்ணன் என்பவர் ஆர்.கே காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தற்போது அவர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் ஆர்.கே நகர் மக்களை இழிவுபடுத்திய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement