2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 14 மேயர் பதவிகளில் பாஜகவும், 2 மேயர் பதவிகளில் பிஎஸ்பியும் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. தற்போது எங்களுக்கு தலித் மக்கள் மட்டுமல்லாமல் சிறுபான்மையினர், பொதுப்பிரிவினர் என அனைவரும் ஆதரவு அளிக்கின்றனர்.
நாங்கள் ஆட்சி செய்தபோது அது அனைவருக்குமான ஆட்சியாக இருந்தது. அதுவே தற்போது எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஆளும் பாஜகதான். சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும், பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளது.
பாஜகவினர் உண்மையானவர்களாக இருந்தால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். அப்படி அவர்கள் பயன்படுத்தினால், பாஜக வெற்றி பெறாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று கூறினார்.
ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. தற்போது மாயாவதியும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை