ரஜினிக்கு பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஜோடி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயக்குநர் பா.ரஞ்சித், கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவிருக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அத்தோடு படத்தின் கதாநாயகியை ஒப்பந்தம் செய்யும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.


Advertisement

இதற்காக முன்னணி பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படக்குழு இதுகுறித்து வித்யா பாலனை சமீபத்தில் சந்தித்து, அவரை கதாநாயகியாக இறுதி செய்துள்ளதாகவும், படப்பிடிப்பு தேதிகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

இதற்குமுன், ராதிகா ஆப்தே கபாலி படத்தின் கதாநாயகியாக இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் வித்யா பாலன் அந்த கதாபாத்திரத்திற்கு அணுகப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement